இளம்பெண்ணை வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த 62 வயது கணவர்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு, ஓமனைச் சேர்ந்த 62 வயதான கணவர், வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இளம்பெண்ணை வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த 62 வயது கணவர்
Published on

ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான இளம்பெண் சாய்ராவுக்கும், ஓமன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான நாசிப் அல் ஜல்பூபி என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவருடன், ஓமனுக்கு சென்ற சாய்ரா, கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஹைதராபாத்துக்குகணவனால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வாட்ஸ்அப் மூலம் சாய்ராவுக்கு அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாய்ரா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com