``அந்த படத்தை 4 முறை பார்த்து என் பொண்டாட்டிய கொன்னேன்..’’ கணவன் வாக்குமூலம்

x

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், மனைவியைக் கொலை செய்து திரிஷ்யம் பட பாணியில் நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். புனேயை சேர்ந்த சுமீர் ஜாதவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி அஞ்சலிக்கு தெரியவந்ததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சுமீர் எரித்துள்ளார். பின்னர், இதை திசை திருப்ப மனைவியின் செல்போனிலிருந்து வேறொரு நபருக்கு காதலிப்பதாக கூறி, சுமீர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து போலீசில் சிக்கிய அவர், திரிஷ்யம் படத்தை நான்கு முறை பார்த்து இந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்