மீரட், உத்தரப்பிரதேசம்||கார் ஏற்றி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது - விசாரணை

கார் ஏற்றி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது - விசாரணை

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியை காரில் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கணவன் மற்றும் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜிப்பூரைச் சேர்ந்த சுனிதா சிங், தனது கணவர் மயங்க் சிங் மற்றொரு பெண்ணுடன் காரில் செல்வதைப் பார்த்து அவர்களை வழிமறித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், மயங்க் காரை நிறுத்தாமல் சுனிதா மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் காரின் பானட்டில் சிக்கிய சுனிதா, சுமார் 100 மீட்டருக்கும் மேலாக இழுத்துச் செல்லப்பட்டதாகவும், காரை தடுப்புச் சுவரில் மோதி கீழே தள்ள முயன்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

பின்னர் புதருக்குள் தள்ளி கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட சுனிதா அளித்த புகாரின் பேரில், கணவர் மயங்க் சிங் மற்றும் மாஹி வர்மா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com