இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் - கிடைத்த இடம் எது தெரியுமா?
அகழாய்வு பணியின் போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
இலங்கையில், சம்பூர் அருகே மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அகழாய்வு பணி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை திருகோணமலை - சம்பூர் சிறுவர் பூங்கா அருகே உள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மெக் என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 ம் தேதி நடைபெற்ற அகழாய்வு பணியின் போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் இடத்தை பார்வையிட்டு அகழாய்வு பணிகளை இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாக கருத்தப்படும் சம்பூர் பகுதியில் மீண்டும் 23ம் தேதி துறைசார்ந்த அதிகாரிகளுடன் அகழாய்வு பணி நடக்க உள்ளது.https://youtu.be/nIlytvF0xKE
