Kerala | "ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது?" - பள்ளி புத்தகங்களில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த பாடம்

x

"ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது?" - பள்ளி புத்தகங்களில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த பாடம் - கேரள அரசு அதிரடி ஆக்‌ஷன்

பள்ளி புத்தகங்களில் ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்த பாடம் இடம்பெறும் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்நிலையில் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீப காலங்களில் ஆளுநர்களை தவறாக பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் கீழ் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாநில ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விளக்கும் பாடங்கள் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்