ஹனிமூனில் கணவனின் கதையை முடித்தது எப்படி? கூலி படையினருடன் நடித்து காட்டிய மனைவி

x

ஹனிமூனில் கணவனின் கதையை முடித்தது எப்படி? சம்பவ இடத்திலே கூலி படையினருடன் நடித்து காட்டிய மனைவி..

தேன்நிலவுக்குச் சென்றபோது கணவன் கூலிப்படை வைத்து கொல்லப்பட்ட விவகாரம்.

குற்ற சம்பவம் நடந்த விதத்தை அரங்கேற்றம் செய்ய குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறை.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மெஹாலயா மாநிலத்திற்கு தேனிலவுக்காக சென்ற போது மனைவியால் கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் ராஜா ரகுவன்ஷி மனைவி சோனம் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல்துறையினர் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிரபுஞ்சியின் வெய் சாவ்டாங் நீர்வீழ்ச்சியில் குற்றம் நடந்த இடத்தில் குற்றம் எவ்வாறு நடந்தது என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடித்துக் காட்ட உள்ளனர்.

குற்றவாளிகள் குற்றம் நடந்த விதத்தை அரங்கேற்றம் செய்வது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்


Next Story

மேலும் செய்திகள்