Delhi Airport | `எவ்ளோ ட்ரிக்கா கொண்டு வர்றாங்கய்யா' - ஏர்போர்ட்டிலேயே செக் வைத்த அதிகாரிகள்

`எவ்ளோ ட்ரிக்கா கொண்டு வர்றாங்கய்யா' - ஏர்போர்ட்டிலேயே செக் வைத்த அதிகாரிகள்

#Delhi #Airport #DelhiAirport #GoldSmuggling #Gold #ThanthiTV

Delhi Airport | `எவ்ளோ ட்ரிக்கா கொண்டு வர்றாங்கய்யா' - ஏர்போர்ட்டிலேயே செக் வைத்த அதிகாரிகள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த இந்தியப் பயணி ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பிலான 3.20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயிலிருந்து வந்த அந்தப் பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது உடைமைகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது, கதவுகளைத் தானாக மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘ஃப்ளோர் ஸ்பிரிங்’ எனப்படும் இயந்திர சாதனத்திற்குள் தங்கக் கம்பிகள் மிகவும் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com