"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி
Published on

சீரடி சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, சீரடியில் உள்ள அவரது நினைவிடத்தில் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக கோயிலுக்கு சென்ற அவர், வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் பேசுகையில், தனது தலைமையிலான அரசு, 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாமல் யாரும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் மோடி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com