பின்னால் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்த இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி வீடியோ

x

திறந்துகிடந்த பாதாளசாக்கடையில் ஸ்கூட்டியுடன் விழுந்த இளைஞர்

உத்தரப்பிரதேசத்தில், திறந்துகிடந்த பாதாள சாக்கடையில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியுடன் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் இந்திராபுரம் பகுதியில், இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ரிவர்ஸ் எடுத்தபோது, பின்னால் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் ஸ்கூட்டியுடன் சேர்ந்து கீழே விழுந்தார். இது குறித்து அங்கிருந்த சிறுவர்கள் குரல் எழுப்பியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை மீட்டனர். சிறு காயங்களுடன் அந்த இளைஞர் உயிர்தப்பிய நிலையில், மாநகராட்சியின் கவனக்குறைவான போக்கிற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்