அதீத உயரம் கொண்ட காவலருக்கு ஹார்மோன் சுரப்பிக்கான சிகிச்சை

x

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சுனில்குமார் என்பவர் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். 7 அடி 5 அங்குல உயரம் கொண்ட இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தி கிரேட் காளியை விட சுனில் குமார் 5 அங்குலம் உயரமானவர் ஆவார். அதீத உயரம் மற்றும் அக்ரோமெகலியின் என்ற அரிதான ஹார்மோன் கோளாறால் சுனில்குமார் பாதிக்கப்பட்ட நிலையில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் தற்போது ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக சுனில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்