பிரணாய் ஆணவப் படுகொலை : மனைவி அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்

தெலுங்கானாவில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாயின் மனைவி அம்ருதாவை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
பிரணாய் ஆணவப் படுகொலை : மனைவி அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்
Published on
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் செப்டம்பர் 14-ல் பிரணாய் என்ற தலித் இளைஞர் அவருடைய மனைவி கண் எதிரிலேயே கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். இந்த ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பிரணாயின் மனைவி அம்ருதாவையும், அவரது பெற்றோரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் கட்சியின் சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார். தமிழகத்தில் கவுசல்யா சங்கர் போராடி வெற்றி கண்டதை போல, துணிச்சலாக போராடி வெற்றி பெற வேண்டும் என்று திருமாவளவன் அம்ருதாவுக்கு ஊக்கமளித்ததாக கூறப்படுகிறது. கணவர் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக அம்ருதா தம்மிடம் தெரிவித்ததாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com