

ஊரடங்கு உத்தரவுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்களின் நகர்வுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் தனிநபர்களின் நகர்வுக்கு மட்டும்தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது, இதைத்தவிர சரக்கு வாகனங்களும், பொது மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு அல்லது விமானத்திலிருந்து இறங்கி தங்களின் சொந்த ஊருக்கு பயணிக்கும் பயணிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.