Hindi | Thanjavur Railway Station| தஞ்சை ஸ்டேஷனில் தூக்கப்பட்ட `இந்தி’ பலகை

தஞ்சை ஸ்டேஷனில் தூக்கப்பட்ட `இந்தி’ பலகை

#hindi #thanjavurrailwaystation தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தி பெயர் பலகை அகற்றப்பட்டு, தமிழ் பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயிலில், பெரிய கோயில் கோபுர வடிவமைப்பின் கீழ் மிகப்பெரிய அளவில் இந்தி எழுத்துப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் பெயர் பலகையை சிறியதாக வைத்துவிட்டு, இந்திக்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறி நேற்று போராட்டம் நடத்த தமிழ் அமைப்பினர் திரண்டனர். ரயில்வே அதிகாரிகள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்தி பலகை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக தமிழ் பெயர் பலகை வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com