புதிய கல்வி கொள்கைப்படி மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயம் என அறிவிப்பு
மஹாராஷ்டிரத்தில் 2025-ம் கல்வியாண்டு முதல், முதலாவது வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாய மூன்றாவது மொழியாக்கப்படுகிறது. இது தேசிய கல்வி கொள்கை (NEP) 2020-ன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT மற்றும் பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும். ஆங்கன்வாடி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி முகாம்கள் நடைபெறும். பழைய பாடத்திட்டத்திலிருந்து புதியதிற்கு மாறும் வகுப்புகளுக்கான ‘பிரிட்ஜ் கோர்ஸ்’களும் உள்ளன. மேலும, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய ‘Holistic Progress Card’ (HPC) அறிமுகப்படுத்தப்படுகிறது.
Next Story
