இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில், திபெத்தியர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. திபெத்தியர்கள் பாரம்பரிய உடை அணிந்து, பேரணியில் ஈடுபட்டனர். இதே நாள், 1913 ஆம் ஆண்டு திபெத் சுதந்திர தினமாக, 13-வது தலாய்லாமா பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.