இமாச்சலில் தொடரும் கனமழை : 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சலில் தொடரும் கனமழை : 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கின்னாவூர், குலூ மற்றும் கங்காரா மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்தும் முடங்கியது. நீர்பிடிப்பு பகுதிகளில் ​பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிக அளவில் நீர்திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ரவி, பியாஸ் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தவண்ணம் இருப்பதால் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com