``சிறுவர்கள் சினிமா பார்க்க கட்டுப்பாடு..'' ``அனுமதிக்க கூடாது..'' - தெலுங்கானா ஹைகோர்ட் உத்தரவு
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா பார்ப்பதால் தூக்கம் கெட்டு அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி விஜயேசன் ரெட்டி, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்கு பின்பும் திரையிடப்படும் சினிமா காட்சிகளை பார்க்க அனுமதிக்க கூடாது என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
