Husband Slaps Wife | மனைவியை அறைந்த கணவனுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பு

மனைவியை அறைந்த கணவனுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பு

தாய் வீட்டில் தங்கிய மனைவி.. கணவன் விட்ட அறை.. கணவனுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பு.. சொன்ன காரணம் தான் ஹைலைட் #husbandwifefight #husbandslapswife மனைவியை அறைந்த கணவனுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பு கணவரிடம் சொல்லாமல் பிறந்த வீட்டில் தங்கிய மனைவியை ஒருமுறை அறைந்தது கொடுமைப்படுத்தியதாக கொள்ள முடியாது என, குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம், லல்சாத் மாவட்டத்தில் கணவரிடம் சொல்லாமல் பிறந்த வீட்டில் தங்கிய மனைவியை அறைந்து கொடுமைப்படுத்தியதாகவும், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,கணவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் கடந்த 2003-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அந்த கணவரின் மேல்முறையீடு மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி, கணவரிடம் சொல்லாமல் பிறந்த வீட்டில் தங்கிய மனைவியை ஒருமுறை அறைந்த சம்பவத்தை கொடுமைப்படுத்தியதாக கொள்ள முடியாது எனக்கூறி, மனுதாரரை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com