கேரளாவில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

கேரள மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 13 ஆம் தேதியும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்