கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம்

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம்
Published on

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டி, மாமுண்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் பாய்ந்தோடும் ஆறில் வெள்ளநீர் கரைபுரண்டோடுகிறது. சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் வருவதால் அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளே இதற்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர்கள், நிலத்தடி நீர் மாசு அடைவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com