Kerala Rain || இடுக்கியில் கொட்டி தீர்க்கும் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மலைப்பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
