ஹெல்த்கேர் CEO கொலை வழக்கின் விசாரணை.. 26 வயது இளைஞர் செய்த கவன ஈர்ப்புக் கொலை..!

x
    • FBI ஆபிஸர்ஸ் Handcuff போட்டு கூட்டிட்டு வரக்கூடிய இந்த நபர் ஒண்ணும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மெடிக்கல் சீட்டு கொடுத்த நம்ம சிவாஜி கிடையாது.
    • இவர் ஒரு கொலை குற்றவாளி... இந்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கனும் நீதிமன்றத்துல வாதம் நடந்துட்டு வருது... ஆனா, இன்னைக்கு பல அமெரிக்கர்கள் இவர தலைவனா கொண்டாடிட்டு இருக்காங்க...
      • ஒருவேளை இவருக்கு விடுதலை கிடைச்சா அடுத்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் இவர் தான்னு சொல்லக்கூடிய அளவுக்கு இன்னைக்கு இந்த கொலையாளிக்கு மக்கள் மத்தியில ஆதரவு அதிகரிச்சுட்டே வருது,.
      • இவரோட பேரு லூயிஜி மங்கியோனே.. (Luigi Mangione) சுருக்கமா LM..
      • இந்த பெயர் தான் இன்னைக்கு அமெரிக்காவோட Sensation-ஆ மாறி இருக்கு...
      • ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், LinkedIN, Tinder... இப்படி அமெரிக்காவுல உள்ள எந்த சோஷியல் மீடியா பக்கத்த ஓப்பன் பண்ணாலும்.. அதுல லூயிஜி மங்கியோன விடுதலை செய்... விடுதலை செய் என்ற போஸ்ட்ட நிச்சயமா பார்க்க முடியும்.
      • லூயிஜியோட Lips-அ பாருய்யா... அவரோட நடைய பாருய்யா... மனுஷன் என்னம்மா ஸ்டைல்லா இருக்கான்... இவரோட வாய்ஸ்-அ தினமும் கேட்டுக்கிட்டே இருக்கணும்... இந்த கண்ண வாழ்நாள் முழுக்க பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்குனு பாலின பாகுபாடு இன்றி பலரும் இந்த இளைஞருக்காக Heart-அ Melt பண்ணிட்டு இருக்காங்க...
      • யாருயா இவரு ? எனக்கே இவர்ர பற்றி தெரிஞ்சிக்கனும் போல இருக்கே“ என்ற ஆர்வத்தோட தான் நம்முடைய குற்றசரித்திர டீமும் இவரோட கேஸ் ஹிஸ்டரிய கையில எடுத்தோம்.
      • சென்ற டிசம்பர் மாதம் நான்காம் தேதி நியூயார்க் மாகாணத்துல உள்ள ஸ்டார் ஹோட்டல்ல முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கு. அந்த Conference-ல கலந்துக்கிறதுக்காக United healthcare CEO Mister. Brain Thompson வந்திருக்காரு.
      • அன்னைக்கு அதிகாலை சுமார் ஆறே முக்கால் மணி இருக்கும். அப்போ, Brain Thompson-அ துப்பாக்கியோட பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் இரண்டு முறை அவர Shoot பண்ணி இருக்காரு. குண்டடிப்பட்ட Brain Thompson உயிரிழந்துவிட கொலையாளிய பிடிப்பதற்கான விசாரணை வேகமெடுத்துச்சு.
      • சம்பவ நடந்த இடத்துல பொருட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்கள ஆய்வு செஞ்சப்ப கொலையாளி மோட்டார் சைக்கிள்ல தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபரோட புகைப்படத்த வெளியிட்ட FBI துப்பு கொடுக்குறவங்களுக்கு சன்மானம் வழங்கபடும் அறிவிச்சு இருந்தாங்க.
      • சரியா அஞ்சு நாள் கழிச்சு டிசம்பர் 9 ம் தேதி பென்சில்வேநியா மாகாணத்துல உள்ள ஒரு McDonalds ஹோட்டல இருந்து காவல்துறையினருக்கு ஒரு போன் கால் வந்திருக்கு. தாம்ஸன் கொலை வழக்குல தேடப்பட்டு வரக்கூடிய அங்க அடையாளங்களோட இங்க ஒரு நபர் லேப் டாப் நோண்டிகிட்டு கூலா காஃபி சாப்பிட்டுட்டு இருக்கிறதா Clue கொடுத்திருக்காங்க. உடனே அந்த ஹோட்டலுக்கு மஃப்டீல போன போலீஸ் சந்தேகத்திற்குரிய நபர் அணிஞ்சிருந்த முகமூடிய கழட்ட சொல்லி இருக்காங்க. பதற்றப்படாம Face Reveal பண்ண அந்த நபர் புன்னகையோட ஹை சொல்லி இருக்காரு.
      • Doubt-எ இல்ல.. இவர் தான் தேடி வந்த குற்றவாளினு கோழி அமுக்குற மாதிரி மடக்கி பிடிச்ச போலீஸ் அவர் வெச்சிருந்த கைபைய சோதனை பண்ணி இருக்காங்க. அதுல, 3D Gun, Rosaria Mark என்ற பேர்ல ஒரு Fake Driving License... மற்றும் ஹெல்த்கேர் Industry-க்கு எதிராக எழுதப்பட்டிருந்த ஒரு அறிக்கையும் இருந்திருக்கு.
      • பிடிப்பட்ட நபர்கிட்ட மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைல தான் அவரோட உண்மையான பேரு லூயினி மங்கியோனே –ன்னு தெரியவந்துச்சு.
      • அமெரிக்காவுல உள்ள மேரிலாந்த்ல பிறந்த லூயிஜி, பென்சில்வேனியா University-ல Artificial Intelligence பட்டம் வாங்கி இருக்காரு. படிப்புல Topper-அ திகழ்ந்த லூயிஜியோட குடும்பத்துக்கு வசதி வாய்ப்புலயும் எந்த குறையும் இல்ல...
      • லூயிஜி தவறான பாதைல போய் கையில துப்பாக்கிய எடுக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் இவரோட வாழ்க்கை ரொம்பவே Easy Going-ஆ இருந்தது அவரோட சோசியல் மீடியா Profiles- மூலமா புரிஞ்சிக்க முடியுது.
      • இவ்ளோ Happy Youngman எப்படி ? இந்த மோசமான செயல செஞ்சாருன்னு In Depth-அ இறங்கி Investicate பண்ணோம். அப்போதான் லூயிஜி மங்கியோனே வாழ்க்கையிலயும் சோகமான பல பக்கங்கள் இருந்தது தெரிய வந்தது.
      • சில வருங்களுக்கு முன்னாடி லூயிஜி மங்கியோனே கடுமையான முதுகு வலியால அவதிப்பட்டு இருக்காரு. மருத்துவ சிகிச்சையில அவருக்கு ஸ்பான்டிலோலிஸ்தெசிஸ் -னு (Spondylolisthesis ) Diagnose பண்ணி இருக்காங்க. இதுவொரு எலும்பு சம்பந்தப்பட்ட வியாதி. இந்த நோயால பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்த லூயிஜி-க்கு Insurance Claim பண்றதுல சிக்கல் ஏற்பட்டதா சொல்லப்படுது.
      • மருத்துவ சிகிச்சைக்காக செலவு பண்ண பணத்த இன்சுரன்ஸ் நிறுவனங்கள் Reimburse செய்ய மறுத்திருக்காங்க. அதுமட்டுமில்லாம, லூயிஜியின் குடும்ப உறுப்பினர்களோட மெடிக்கல் Claims-ம் தொடர்ச்சியா நிராகரிக்கப்பட்டு வந்திருக்கு.
      • கார்ப்ரேட் நிறுவனங்களோட இந்த செயல் லூயிஜிய மனசளவுல ரொம்பவே பாதிச்சதா சொல்லப்படுது. செல்வந்தர்களா உள்ள தங்களுக்கு இந்த நிலைனா ஏழை மக்கள் என்ன செய்வாங்கனு கவலை அடைஞ்சிருக்காரு. மனசுக்குள்ளயே இதற்கு என்ன தான் தீர்வுனு யோசிச்சு யோசிச்சு ஒருக்கட்டத்துல புரட்சி பண்ண தயாராகி இருக்கு..
      • இன்சுரன்ஸ் நிறுவனங்களோட இந்த பிரச்சனைய நாடே விவாதிக்கனும்னு முடிவு பண்ண லூயிஜி துப்பாக்கி கையில எடுத்து இருக்காரு. யார்ர கொலை செஞ்சா இது பேசுபொருளாகும்னு ஸ்கெட்ச் போட்டவர், சென்ற நவம்பர் மாசம் 24 ம் தேதி நியூயார்க்கு வந்து ஒரு ஹோட்டல்ல Rosaria Mark என்கிற போலி அடையாளத்தோட Check In பண்ணி இருக்காரு.
      • பத்து நாளா United Healthcare நிறுவனத்தோட CEOவ ரகசியமா பின் தொடர்ந்த லூயிஜி மங்கியோனே டிசம்பர் 9 ம் தேதி அவர் Load பண்ணி வெச்சிருந்த Trigger-அ அழுத்தி கொலை செஞ்சி இருக்கிறது விசாரணைல தெரியவந்திருக்கு.
      • உயிரிழந்த தாம்சனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த காரணத்தால இந்த இளைஞருக்கு கடுமையான தண்டனை விதிக்கனும் பலரும் கருத்து தெரிவிச்சாங்க. ஆனா, பெரும்பாலான அமெரிக்கர்கள் லூயிஜி எதிர்கொண்ட இன்சுரன்ஸ் சிக்கல்களால பாதிக்கப்பட்டு இருந்ததால நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு அதிகரிக்க ஆரம்பிச்சது.
      • பலரும் இவரோட வயச காரணம் காட்டி விடுதலை செய்யனும்னு கோரிக்கை வெச்சாங்க. ஒருக்கட்டத்துல FreeLuigi என்ற Hashtag அமெரிக்காவுல Trending ஆகவும் அதிபர் Donald TTrumph மக்களுடைய மனநிலை அதிர்ச்சியளிக்கிறதா அவரோட அதிருப்திய வெளிப்படுத்தி இருந்தாரு.
      • லூயிஜிய விசாரணைக்கு அழைச்சிட்டு வர்ற காணொளிகளும், அவர் நீதிமன்றத்துல ஆஜார்படுத்தப்படுற காணொளிகளும் சோஷியல் மீடியால வைரலா பகிர தொடங்கினாங்க.
      • ஒரு சிலர் லூயிஜி எவ்வளவு அழகா இருக்கார்னு பாருங்க... அவர் தான் அமெரிக்காவோட the most wanted Handsome Killer-னு போஸ்ட் போட்டு இருக்கிறது உண்மையிலயே இந்த சமூகம் எதைநோக்கி போய்கிட்டு இருக்குன்ற கேள்விய தான் எழுப்புது.
      • ஒருபக்கம் லூயிஜி மங்கியோனேவுக்கு தூக்கு தண்டனை விதிக்கனும் வாதாடிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் அவர்ர விடுதலை செய்யனும்னு மக்கள் போராடிட்டு இருக்காங்க...
      • ஆனா, லூயிஜி மங்கியோனே அவர் நினைச்சது நடந்துருச்சி என்ற திருப்தியோட நான் குற்றமற்றவன்னு சூளுரைக்குறாரு... அடுத்து என்ன நடக்கப்போகுது என்றத Lets wait and watch.

Next Story

மேலும் செய்திகள்