ஹரியானா பறக்கும் பிரதமர் | Haryana | PM Modi

பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை ஹரியானா மாநிலம் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, 9 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம், ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குருஷேத்ராவில் உள்ள ஜோதிசாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனுபவ மையம் என்ற அருங்காட்சியகத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com