மனு பாக்கர் வீட்டில் ஏற்பட்ட 2 மரணங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி

x

அரியானாவில் நிகழ்ந்த கார் விபத்தில், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கரின் பாட்டி மற்றும் மாமா உயிரிழந்தனர். மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் அவரது பாட்டி சாவித்திரி தேவி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் மகேந்திரநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்று மோதி தலைக்குப்புற கவிழ்ந்த‌து. கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், பைக்கில் பயணித்த மனு பாக்கரின் மாமா மற்றும் பாட்டி பரிதாபமாக உயிரிழந்தனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு, நேற்று முன்தினம் கேல் ரத்னா விருதை மத்திய அரசு வாங்கியிருந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்