ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
Published on

ஹரியானா மாநில​ம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்புராவில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 50 அடி ஆழத்தில் உள்ள அந்த சிறுமியை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து, தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த சிறுமியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com