பெண்கள் குறித்த ஹரியானா பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை
பெண்களிடம் போதுமான வீரமும், மனப்பக்குவமும் இல்லை என பாஜக எம்.பி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. ராம் சந்தர் ஜாங்க்ரா, பிவானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார். அப்போது, கணவர்களை இழந்த பெண்கள், தீவிரவாதிகளிடம் கைகூப்பி மன்றாடியதற்கு பதிலாக, அவர்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயிற்சி பெற்றிருந்தால் தீவிரவாதிகளை அனைத்து திசைகளில் இருந்தும் தாக்கியிருப்பார்கள்....அந்தப் பெண்களிடம்
போதுமான வீரம் மற்றும் மனப்பக்குவம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். எம்.பி.யின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
Next Story
