Kerala | புகார் கொடுத்தவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை... இளைஞரை விடுதலை செய்த கோர்ட்
இளைஞரை விடுதலை செய்த கோர்ட்
#kerala | #court புகார் கொடுத்தவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை... இளைஞரை விடுதலை செய்த கோர்ட் கேரளாவில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு எதிரான நடவடிக்கைகளை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பத்தனம்திட்டா காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் 23 வயது குற்றவாளிக்கு எதிரான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரான இளம்பெண்ணை திருமணம் செய்து இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நீதிபதி சி. பிரதீப் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
