கையை கடித்து கொ*ல மிரட்டல் - சிறுவனை தாக்கும் அதிர்ச்சி வீடியோ
லிஃப்ட் கதவை மூடியதால் சிறுவனின் கையை கடித்த நபர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் லிஃப்ட் கதவை மூடியதால் சிறுவனின் கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமர்நாத் பகுதியில் உள்ள குடியிருப்பில் 12 வயது சிறுவன் லிப்டில் செல்லும் போது கதவை மூடியுள்ளார். அப்போது உள்ளே புகுந்த நபர், தான் வருவதற்கு முன்பே லிப்ட் கதவை மூடிய சிறுவனை வசைபாடி கன்னத்தில் அறைந்ததோடு, சிறுவனின் கையை கடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
Next Story
