இப்படி ஒரு நோயா..? முகம் முழுவதும் முடி ''பார்த்தாலே பயம் வருதே''

x

முகம் முழுவதும் முடி நிறைந்த மத்தியப்பிரதேச இளைஞர், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் (Ratlam) மாவட்டத்தில் உள்ள ந‌ந்த்லெட்டா (Nandleta ) கிராமத்தை சேர்ந்தவர் ல‌லித் பட்டிதர் (Lalit Patidar). 18 வயதே ஆன இவர், ஹைப்பர் டிரிகோசிஸ் (hyper trichosis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, முகம் முழுவதும் முடி வளர்ந்துள்ளது. இவரது முகத்தில் ஒரு சதுர சென்டி மீட்டர் இடத்தில் 201.72 முடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. முகத்தில் 95 விழுக்காடு முடி நிறைந்து இருப்பதால், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலக அளவில் இவரைப்போன்று 50 பேர் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்