`H1N1 வைரஸ்' - சுகாதாரத்துறை வெளியிட்ட பகீர் தகவல்

H1N1 நோயாளிகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் பருவகால காய்ச்சல் தொற்று அதிகளவில் இல்லை எனவும், அதேசமயம், வரும் காலங்களில் INFLUENZA எனப்படும் சுவாச நோய்த்தொற்று அதிகரிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவகால மற்றும் பறவை காய்ச்சல் வைரஸை உன்னிப்பாக கவனித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com