குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு

டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு
குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு

டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். சீக்கிய மதத்தின் ஒன்பாதவது குருவின் 400-வது பிறந்தநாளையொட்டி, குருதுவாராவில் உள்ள சிஸ் ஹஞ்ச் சாஹிப் கோயில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பிரதமர் மோடியை சீக்கியர்கள் வரவேற்றனர். பின்னர், கோயிலுக்குள் சென்ற பிரதமர், சீக்கிய மரபுபடி, வழிபாட்டில் பங்கேற்றார்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சிக்கியர்கள் படையெடுத்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் வந்த சீக்கியர்கள், பொற்கோயிலில் உள்ள குளத்தில் புனித நீராடினர். பின்னர் பொற்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com