Gujarat | கோடை வெப்பம் - போக்குவரத்து காவலர்களுக்கு "Cooling Jacket"

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் Cooling Jacket கூலிங் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது, ​​கடுமையான கோடை வெப்பத்தைச் சமாளிக்க காவலர்களுக்கு உதவும் வகையில், அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை உயர் தொழில்நுட்ப குளிரூட்டும் ஜாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பேட்டரியால் இயங்கும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜாக்கெட்டுகள் மிகவும் பயனுள்ளதாகவும், உடல் வெப்பநிலையைக் குறைத்து, வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க உதவுவதாகவும் போக்குவரத்து காவலர்கள் தெரிவிக்கின்றனர்..

X

Thanthi TV
www.thanthitv.com