தண்ணீர் மூலம் காரை இயக்க கூடிய சாதனம் : குஜராத் இன்ஜினீரிங் பட்டதாரி அசத்தல்

குஜராத்தின் சூர‌த் மாவட்டத்தில் உள்ள கடார்கம் என்ற பகுதியை சேர்ந்த பர்ஷோதம் பிப்பாடியா, காரை தண்ணீரில் இயக்க‌க் கூடிய சாதனத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
தண்ணீர் மூலம் காரை இயக்க கூடிய சாதனம் : குஜராத் இன்ஜினீரிங் பட்டதாரி அசத்தல்
Published on
குஜராத்தின் சூர‌த் மாவட்டத்தில் உள்ள கடார்கம் என்ற பகுதியை சேர்ந்த பர்ஷோதம் பிப்பாடியா, காரை தண்ணீரில் இயக்க‌க் கூடிய சாதனத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினீரிங் பட்டதாரியான பிப்பாடியா, கார் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த டீசல், பெட்ரோலுக்கு மாற்று பொருளை உருவாக்க நினைத்த அவர், கடந்த பத்து ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது வெற்றிகரமாக தண்ணீர் மூலம் காரை இயக்க கூடிய கருவியை கண்டுபிடித்த நிலையில், அதற்கான காப்புரிமை பெற, தனது படைப்பு குறித்த விவரங்களை ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com