ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர்.
ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி
Published on
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர். சூரத்தில் துணி வியாபாரம் செய்து வரும் ஒரு தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்களது செல்லப்பிராணியான பூனையுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சாமிதரிசனம் செய்ய வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், பூனை காணாமல் போனது. இந்நிலையில் தங்களது குழந்தை போல வளர்த்து வந்த பூனையை சுமார் 20 நாட்களுக்கும் மேலாக ரயில் நிலையத்திலேயே அவர்கள் தேடி வருவது பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com