"குற்றவாளி தான்... ஆனால் தண்டனை இல்லை" - இதுவரை நாடு பார்க்காத வித்தியாச தீர்ப்பு
"குற்றவாளி தான்... ஆனால் தண்டனை இல்லை" - இதுவரை நாடு பார்க்காத வித்தியாச தீர்ப்பு
2018 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் மேற்கு 24 பர்கானஸ் மாவட்டத்துல 14 வயது சிறுமிய பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது இளைஞர கைது செய்து உள்ளூர் போலீசார் விசாரிச்சுருக்காங்க.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், இளைஞருக்கு திருமணம் நடந்துருக்கு. கட்டாய திருமணம்னு குற்றம் சாட்டப்பட்ட வேளையில, இருவருக்கு ஒரு குழந்தையு பிறந்துச்சு.
இதுக்குகிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்க விசாரிச்ச உள்ளூர் போக்சோ நீதிமன்றம், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிச்சு தீர்ப்பளிச்சுது.
போக்சோ நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரா இளைஞர் தரப்புல கொல்கத்தா உயர்நீதிமன்றத்துல மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுச்சு. அந்த வழக்குல 2023 அக்டோபர்ல இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனைய ரத்து பன்னி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுச்சு.
வழக்கு விசாரணையில வாக்குமூலம் கொடுத்த பாதிக்கப்பட்ட சிறுமி, தனது விருப்பத்தின் பேர்ல தான் உறவு கொண்டதாவு, திருமணமும் செய்துக் கொண்டதாகவு தெரிவிச்சுருக்காங்க.
அப்போ இளம்பெண்கள் இரண்டு நிமிட இன்பத்துக்கு ஆசப்பட்டு பாலியல் உணர்வுகளுக்கு இடமளிக்கும் பட்சத்துல அவங்க இந்த சமுதாயத்தின் பார்வைக்கு இழந்தவர்களாக தெரிகின்றனர்-னு, இளம்பெண்கள் பாலியல் உணர்வுகள கட்டுப்படுத்துங்க-னு நீதிபதிகள் தெரிவித்த கருத்து அதிர்வலைய ஏற்படுத்துச்சு.
இதன் தொடர்ச்சியா உச்சநீதிமன்றம் வழக்க தாமாக முன்வந்து விசாரிச்சுது . கொல்கத்தா உயர்நீதிமன்ற கருத்த கண்டித்த உச்சநீதிமன்றம் ,இளைஞர விடுதலை செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவ ரத்து பன்னுச்சு
அதேவேளையில சிறுமி பாலியல் பலாத்காரம் விவகாரத்துல இளைஞர் குற்றவாளி என்பத உறுதி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கான தண்டனைய அறிவிக்கல.
அதுவே மேற்கு வங்க அரசுக்கு குழு ஒன்ற நியமித்து, சிறுமியிடம் பேசி, அவருக்கான தேவைய கண்டறிய கேட்டுக் கொண்டது. இளைஞருடன் பெண் பற்று கொண்டிருப்பதும், அவர் தனது கணவர், குழந்தைனு குடும்பம் பற்றியே யோசிப்பதும் தெரியவந்துச்சு.
இது உச்சநீதிமன்றத்துல தெரிவிக்கப்பட்டுச்சு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வுல விசாரணை நடைபெற்றது.
விசாரணை இறுதியில ,பெண்ண குடும்பம் கைவிட்டுருச்சு, அவர் தன்னோட கணவர காப்பாத்த முயற்சி செய்றாங்கனு நீதிபதிகள் தெரிவிச்சாங்க.
பாதிக்கப்பட்டவர் அத ஒரு கொடூரமான குற்றமாக பார்க்கல,
சம்பவத்துக்கு பிறகு, அதாவது விசாரணை, சட்ட நடவடிக்கைகள்-னு தொடர்ந்தவையே அந்த பெண்ண மனதளவுல பாதிப்படைய செய்திருக்குனு நீதிபதிகள் கருத்து தெரிவிச்சாங்க.
குற்றம் சாட்டப்பட்டவர காப்பாற்ற அந்த பெண் காவல்துறை மற்றும் சட்ட அமைப்போட போர எதிர்கொள்ள வேண்டியிருந்ததுனு குறிப்பிட்ட நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்துல இளைஞருக்கு தண்டனை அறிவிக்கல.
சிறு குடும்பத்த நம்பியிருக்க பாதிக்கப்பட்ட பெண்ணோட சூழல கருத்துல கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது விதிய கையில எடுத்து உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்ப வழங்கியிருக்கு. அரசியலமைப்பு சட்டத்தின் 142 ஆவது பிரிவு எந்த ஒரு வழக்குலையு முழுமையான நீதிய வழங்க எந்த உத்தரவையு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கியிருக்கு. தீர்ப்ப மத்திய, மாநில அரசுக்களுக்கு அனுப்பியிருக்க உச்சநீதிமன்றம், இதுகுறித்து கருத்து தெரிவிக்கவு கேட்டுருக்கு.
