"ஓடிடி- நெறிப்படுத்த வழிகாட்டுதல்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஓடிடி தளங்களை நெறிப்படுத்த விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
"ஓடிடி- நெறிப்படுத்த வழிகாட்டுதல்கள்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
Published on

ஓடிடி தளங்களை நெறிப்படுத்த விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திரையரங்குகளில் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், ஓடிடி தளத்திற்கு விரைவில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com