GST Reforms 2025 | அமலுக்கு வந்த‌து GST சீர்திருத்தம் - எதன் விலை குறைகிறது? உயருகிறது?

x

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால், மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஆடம்பரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சோப்பு, ஷாம்பு, பற்பசை, சமையல் எண்ணெய், பால் பொருட்கள், பிஸ்கட், சிப்ஸ், நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வலை குறைந்துள்ளது.

குளிர்பதனப்பெட்டி, ஏ.சி., டி.வி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. 350 சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள், டிராக்டர்கள், விவசாய இயந்திரங்களின் விலையும் குறைந்துள்ளது. இவை தவிர, அழகு நிலையம், சலூன், உடற்பயிற்சி மையம் மற்றும் யோகா மைய சேவைகள், தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு கட்டணம் குறைந்துளது. மேலும், சிமெண்ட், கிரானைட், சலவை கற்கள், செங்கற்கள் விலையம் குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்