தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்

சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தேசிய அளவில் நான்காவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் ரூ-23,325 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்
Published on

மறைமுக வரி விதிப்பு முறை கடந்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய அளவில் மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிவருவாய் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெறற நிகழ்ச்சியில் பேசிய அவர், 13 லட்சம் கோடியாக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

46 ஆயிரத்து 826 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம் 25 ஆயிரத்து 840 கோடியும், கர்நாடகம் 24 ஆயிரத்து 26 கோடியும் வசூலித்து இரண்டு மற்றும் மூன்றாவது இட்த்தில் உள்ளன. தமிழகம் 23 ஆயிரத்து 325 கோடி ரூபாய் வசூல் செய்து தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் 18 ஆயிரத்து 206 கோடி ரூபாய் வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிவசூல்

மகாராஷ்டிரம் - ரூ.46,826 கோடி

உத்தரப்பிரதேசம் - ரூ.25,840கோடி

கர்நாடகம் - ரூ.46,026 கோடி

தமிழகம் - ரூ.23,325 கோடி

குஜராத் - ரூ.18,206 கோடி

X

Thanthi TV
www.thanthitv.com