தாலிகட்டிய 1 மணி நேரத்தில் போட்டோ எடுக்கும் போது மாப்பிள்ளை கோர மரணம் - கதறிய மணமகள், உறவினர்கள்
தாலிகட்டிய ஒரு மணி நேரத்தில் மணமகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் பாகல்கோட்டையின் கும்பாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் பூஜா ஜோடிக்கு அதிகாலை முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்றது.
தாலி கட்டிய கையோடு, மனைவி பூஜாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த பிரவீன் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்களெல்லாம், இரவு முழுவதும் விழித்திருந்த களைப்பு என கருதி பிரவீனின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர்.
ஆனால், அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லாததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது. தகவலறிந்த திருமணவீட்டார் கதறியழ, அது வரை கொண்டாட்டமாக இருந்த அந்த இடம் சோகத்தில் மூழ்கியது.
Next Story
