மளிகை கடைக்காரர் தற்கொலை - தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது

x

புதுச்சேரியில், கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். சோரப்பட்டை சேர்ந்த பெரியண்ணசாமி என்பவர் கடந்த மார்ச் 15ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல்நலக்குறைவால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், மளிகை கடையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. தனது மரணத்திற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் தொல்லையே காரணம் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நிறுவனத்தின் கலெக்ஷன் ஏஜென்ட் சக்திவேல் முருகனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் ஜெயசந்திரனையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்