சொந்த வீடு வாங்க செம்ம சான்ஸ் - மக்களுக்கு மெகா இன்ப அதிர்ச்சி செய்தி
சிமெண்ட், இரும்பு கம்பி மீதான ஜிஎஸ்டி வரி வீதம் குறைக்கப்படுவதால் வீடுகளின் விலை குறையும் என கட்டுமான அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின்படி சிமெண்ட், இரும்பு கம்பி மீதான வரி வீதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி குறைப்பால், ரியல் எஸ்டேட் துறை அதிக பலன்பெறும் என கட்டுமான அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கட்டுமான செலவில் 40 சதவீதம் சிமெண்டுக்கும், கம்பிக்குமே செலவாவதால், இந்த வரி குறைப்பின் மூலம் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமன்றி, வீடுகளின் விலை குறைந்து பொதுமக்களும் பயன்பெறுவர் என பிரபல கட்டுமான நிறுவன தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் கட்டுமான நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
