மூதாட்டி மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாருதி எஸ்டேட் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், 60 வயதாகும் முன்னா தேவி என்ற மூதாட்டி தனது மகனுடன் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றிருந்தார். மகன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த நிலையில், அவருடைய தாயான முன்னா தேவி பெட்ரோல் நிலையத்தில் உள்ள தரையில் கீழே அமர்ந்த படி காத்திருந்தார். அப்போது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த கார் ஒன்று மூதாட்டி தரையில் அமர்ந்திருப்பதை கவனிக்காமல் அவர் மீது காரை ஏற்றியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.வருகின்றனர்.
Next Story
