Gowsalya Sankar| SIR Protest| கௌசல்யா சங்கர் கைது
கௌசல்யா சங்கர் கைது
#gowsalyasankar #sirprotest கோவையில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டியவர்கள் கைது கோவையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்ககோரி ரயில் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் ஞானேஷ்குமாரின் புகைப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்றநிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் கோவை ரயில் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
