இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மீண்டும் கிடைத்த மறுவாழ்வு

இரண்டு கைகளையும் இழந்தவருக்கு , தானமாக பெற்ற கைகளை அதிநவீன சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை படைத்துள்ளனர் அரசு மருத்துவர்கள்...

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாராயண சாமி என்ற இளைஞர் கடந்த 2015ல் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சார தாக்குதலுக்கு ஆளாகி தன் இரண்டு கைகளையும் இழந்தார். தன் வாழ்க்கையே முடிந்து போய் விட்டதோ என அஞ்சிய அவர் 3 ஆண்டுகளாக வெளியுலகை சந்திக்காமல் இருந்து வந்துள்ளார்

சென்னை மணலியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம், உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. அப்போது அவரது கைகளையும் மருத்துவர்கள் தானமாக கேட்ட போது, வெங்கடேஷின் தாய் தெய்வக்கனி செய்வதறியாது திகைத்துள்ளார்.

பின்னர் தன் மகனைப் போன்றே இருக்கும் மற்றொரு இளைஞருக்கு இந்த கைகள் பொருத்தப்படும் என்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தன் மகனின் 2 கைகளையும் தானமாக கொடுக்க சம்மதித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com