தடுப்பூசி மையமாக மாறிய அரசு பேருந்து - கிராமங்களில் தடுப்பூசி செலுத்த மாற்றம்

கொரோனா தொற்று மூன்றாவது அலை உலகின் பல பகுதிகளில் தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி ஒன்றே அதனை எதிர்க்கொள்ள தீர்வு என கூறப்படுகிறது.
தடுப்பூசி மையமாக மாறிய அரசு பேருந்து - கிராமங்களில் தடுப்பூசி செலுத்த மாற்றம்
Published on

கொரோனா தொற்று மூன்றாவது அலை உலகின் பல பகுதிகளில் தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி ஒன்றே அதனை எதிர்க்கொள்ள தீர்வு என கூறப்படுகிறது. இந்நிலையில், வடகர்நாடக பகுதிகளில் உள்ள குக்கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்த, அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு பேருந்துகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த பேருந்துகள் இன்று முதல் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக தலைவர் ராஜ்குமார் பாட்டில் தெல்கூர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் நாள் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com