கூகுள் மேப்பை நம்பி தொலைந்து போன பிரெஞ்சுக்காரர்கள்.. உதவிக்கரம் நீட்டிய போலீசார்

x

கூகுள் மேப்பை நம்பி வழி தெரியாமல் தொலைந்து போன பிரெஞ்சுகாரர்களுக்கு, உத்தரபிரதேச மாநில போலீசார் உதவியுள்ளனர். டெல்லியில் இருந்து நேபாளத்திற்கு சைக்கிளில் பயணித்த பிரெஞ்சுக்காரர்கள் 2 பேர், google map காட்டிய குறுக்கு வழியில் பயணித்துள்ளனர். அப்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுரோலி‌ அணை அருகே வழி தெரியாமல் அவர்கள் மாட்டிக் கொண்டனர். இதையடுத்து, கிராம மக்கள் அளித்த தகவல் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களுக்கு உதவியதை அடுத்து, மீண்டும் நேபாளத்தை நோக்கி 2 பேரும் பயணித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்