குட் பேட் அக்லி பட வில்லன் அதிரடி கைது.. போதைப்பொருள் பயன்படுத்தி நடிகையிடம் அத்துமீறல்
- குட்பேட் அக்லி திரைப்பட வில்லன் நடிகர போலீசார் அதிரடியா கைது பண்ணி இருக்காங்க.... மலையாள சினிமா மிரள வைத்த வில்லனின் போதைப்பொருள் பின்னணி பகீர் கிளப்புது...
- மல்லுவுட்டையே மிரள வைத்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ அதிரடி கைது....
- இந்த செய்தி தான் தற்போது கேரள திரையுலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது..
- போதைப்பொருள் பயன்படுத்தி நடிகையிடம் அத்துமீறிய புகாரில் தேடப்பட்ட சாக்கோ ஹோட்டலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்...
- எப்படியும் கைதாகிவிடுவார் என பலரும் வழிமேல் விழி வைத்து காத்திருந்த வேளையில் தான் இன்று தானாக விசாரணைக்கு ஆஜரான சாக்கோ,
- போலீசார் கேட்ட 32 கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்கி திணறி வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
- போதைப்பொருள் டீலர்களுடன் பழகிய சாக்கோவின் பகீர் பின்னணியை கேரள போலிசாருடன் சேர்ந்து டீகோட் செய்ய முற்பட்டோம்...
- மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவர் நடிகை வின்சி அலோசியஸ்.
- உச்ச நடிகை அந்தஸ்துடன் கோலோச்சி வரும் வின்சி, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியது தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் வரும் நடிகர்களுடன் இனி நான் நடிக்க மாட்டேன் என தீர்க்கமாக கூறினார்.
- அதற்கு காரணம் பிரபல நடிகர் ஒருவர் ஹூட்டிங் ஸ்பாட்டில் போதைபொருள் பயன்படுத்திவிட்டு, உடை மாற்றும் அறைக்குள் உதவுவது போல வந்து தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
- இந்த பேச்சு மலையாள சினிமாவில் போதை கலாச்சாரம் உழல்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது..
- முடிவில் போதைப்பொருளை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியவர் பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று கூறிய நடிகை வின்சி அவர் மீது பரபரப்பு புகார் அளித்தார்.
- நடிகர் ஷைன் டாம் சாக்கோவை சர்ச்சையின் மறு உருவம் என்றே பலரும் இவரை அடையாளம் காண்கின்றனர்.
- மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வளம் வரும் இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
- சினிமாவை போல அடிக்கடி பல சர்ச்சையில் கமிட்டாவது 41 வயதான நடிகர் சாக்கோவின் வாடிக்கை.
- கடந்த 2015-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானார் சாக்கோ...
- அதன்பிறகு சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலில் ஒருவர் பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஸி ஆகியோருக்கு நாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்தோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
- இந்த நிலையில் தான் நடிகை வின்ஸி கொடுத்த புகார் தொடர்பாக சாக்கொவை விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். அப்போது அதே ஹோட்டலில் மூன்றாவது மாடியில் தங்கி இருந்த சாக்கோ, ஜன்னல் வழியாக வெளியேறி தப்பி ஓடியிருக்கிறார்.
- ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இதை உறுதி செய்தனர்
- போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதால் சாக்கோவின் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- இந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக இன்று காலை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக நடிகர் ஷைன் டோம் சாக்கோ ஆஜரானார்.
- எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீசார், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு, கிரைம் பிரான்ச் ஆகிய மூன்று பிரிவு போலீசாரும் தயாரித்து வைத்திருந்த 32 கேள்விகளை நடிகரிடம் எழுப்பினர்.
- முதற்கட்ட விசாரணையில் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் குண்டர்களை வைத்து தாக்க வருவதாக எண்ணி விடுதியில் இருந்து தப்பி ஓடியதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார் சாக்கோ.
- ஆனால் அந்த வாக்குமூலத்தில் போலீசாருக்கு நம்பிக்கை இல்லை. இதனால் கேள்விக்கணைகளை தொடுத்தனர். எந்த ஒரு கேள்விக்கும் சாக்கோவிடம் இருந்து திருப்திகரமான பதில் இல்லை. மாறி மாறி குழப்பி இருக்கிறார்.
- விசாரணை நடந்து கொண்டிருந்த போது சாக்கோ திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்.
- ஆனால், இந்த நடிப்பை எல்லாம் உங்க படத்துலயே பார்த்துட்டோம் என அசராத போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் மீண்டும் விசாரணையை தொடர்ந்தனர்.
- அப்போது தான் சாக்கோ மூன்று செல்போன்கள் பயன்படுத்துவது போலீசாருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் விசாரணைக்கு அவர் ஒரு செல்போன் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்.
- அந்த செல்போனை ஆய்வு செய்த போது தான் சம்பவத்தன்று ஹோட்டலில் இருந்து ஒரு வங்கி கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் பணபரிமாற்றம் நடந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
- அது யார் என விசாரித்த போது தான் மொத்த உண்மையும் வெளிவந்திருக்கிறது. பணம் அனுப்பப்பட்ட நபர் போதை பொருள் வியாபாரியான சஜீர். சம்பவத்தன்று அவரும் அந்த ஹோட்டலில் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர்.-
- மொத்த உண்மையும் தெரிந்த பிறகு தப்பிக்க வழியில்லாமல், சஜீருக்கு போதைப்பொருளுக்காக பணம் அனுப்பியதையும், போதைப்பொருள் பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் நடிகர் சாக்கோ.
- இதனால் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27, 29ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை பிறகு நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
- பெரும் பரபரப்பும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை நடிகர்கள் சிக்குவார்கள் என்கிற பின்னணி முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
Next Story
