மரணமடைந்த பெண்ணிடம் திருட்டு | CCTV யால் போலீசிடம் சிக்கிய வார்ட் பாய்

x

உத்தரப்பிரதேசத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணின் காதிலிருந்து தங்கத் தோடு திருடப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கிரண்வாடா கிராமத்தை சேர்ந்த 26 வயதாகும் ஸ்வேதா என்பவர், சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து பிரேதப் பரிசோதனைக்காக ஷாம்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்ணின் காதில் தோடு இல்லாததை கண்டு போலீசார் சந்தேகமடைந்து, வார்டு பாயாக பணியாற்றும் விஜயிடம் விசாரித்தனர். அப்போது, ஒரு காதில் இருந்த தோடு கீழே கிடந்ததாகக்கூறி வழங்கியுள்ளார். பின்னர் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது தோடு திருடியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்