Bihar | Crime | ஹாஸ்பிடல் கேம்பஸ்க்குள் டாக்டரிடம் தங்கச் செயின் பறிப்பு | பீகாரில் பேரதிர்ச்சி

ஹாஸ்பிடல் கேம்பஸ்க்குள் டாக்டரிடம் தங்கச் செயின் பறிப்பு | பீகாரில் பேரதிர்ச்சி

Bihar | Crime | ஹாஸ்பிடல் கேம்பஸ்க்குள் டாக்டரிடம் தங்கச் செயின் பறிப்பு | பீகாரில் பேரதிர்ச்சி சம்பவம் #bihar #hospital

பீகாரில் பெண் மருத்துவரிடம் தங்கச் செயின் பறிப்பு பீகார் மாநிலம் முசபர்பூர் மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவரிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் இருந்து மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கு நடந்து சென்ற மருத்துவர் மதுலிகா சிங்கின் கழுத்தில் இருந்த செயினை, பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியில் கீழே விழுந்த மருத்துவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பைக்கில் வந்த இருவரை தேடி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் 250-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் காவல் சாவடி இருந்தபோதும் பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com