"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்

விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர்.
"10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டனர்" - பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூஹ் விளக்கம்
Published on
விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்கள் சபரிமலை செல்வதற்காக நேற்று பம்பை வரை வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்களின் வயது 50-க்கும் கீழ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ், தென் மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்கு யாத்திரச் சென்றவர்கள் சபரிமலை வந்ததாக கூறினார். சபரிமலையில் உள்ள சம்பிரதாயங்களை எடுத்துக்கூறியதால் 10 பெண்களும் அவர்களாகவே திரும்பிச்சென்றுவிட்டதாக, நூஹ் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com